சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தை மீட்பு

  டேவிட்   | Last Modified : 30 Oct, 2018 05:15 pm
chennai-police-rescue-boy-kidnapped

சென்னை புளியந்தோப்பில் பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட 3 வயது குழந்தையை காவல்துறையினர் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

சென்னை புளியந்தோப்பில் தனியார் பள்ளியில் படித்து 3 வயது குழந்தையை திங்கட் கிழமை அன்று, குட்டியம்மாள் மற்றும் ஐஸ்வர்யா (தாய்-மகள்) ஆகிய இருவர் கடத்திச் சென்றுள்ளனர். குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு மற்றொரு பெண்ணிடம் விற்க கடத்தியுள்ளதாக தெரிகிறது. பள்ளியில் இருந்து குழந்தையை அழைத்து வர பெற்றோர் சென்றிருந்தபோது, அங்கு குழந்தையை வேறு யாரோ அழைத்துச் சென்றதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பள்ளியின் சிசிடிவி காட்சிகள் மூலம் குழந்தையை தேடிவந்தனர். இந்நிலையில் இன்று மதியம் சுமார் 1 மணியளில் குழந்தையை மீட்டனர். பின்னர் பெற்றோருக்கு தகவல் அளித்து குழந்தையை அவர்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். பெற்றோரும், உறவினரும் குழந்தையை பெற்றுக் கொண்டு, கண்ணீர் மல்க காவல்துறை ஆய்வாளருக்கு நன்றியைத் தெரிவித்தனர்.  மேலும், குழந்தையை அதற்குரிய பெற்றோரிடம் ஒப்படைக்காதது பள்ளியின் தவறு எனவும் காவல்துறையினரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close