கோவை: முதன்முறையாக காவலர்களுக்கு நவீன கழிவறை

  டேவிட்   | Last Modified : 30 Oct, 2018 05:39 pm
india-s-first-police-booth-with-bio-toilet-at-coimbatore

கோவை அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சந்திப்பில், காவலர்களுக்கான நவீன கழிவறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் வெயிலிலும் மழையிலும் போக்குவரத்தை சீர்செய்யும் காவலர்களுக்கு கழிவறை என்பது கிடையாது. இதனால் போக்குவரத்து காவலர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பெண் காவலர்கள் தங்கள் இயற்கை உபாதைகளை கழிக்க பெரும் சிரமத்திற்காளாகினர். 

இதனையடுத்து, கோவை அவிநாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சந்திப்பில் காவலர்களுக்கென நவீன கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் எல்.இ.டி.விளக்குகள், மின்விசிறி, மொபைல் சார்ஜர் வசிதி, தண்ணீர் வசதி உள்ளிட்டவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது அப்பகுதி போக்குவரத்து காவலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும், நாடு முழுவதும் இது போல் அமைத்துக் கொடுக்க அரசு முன் வர வேண்டும் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன். நாட்டிலேயே சாலையில், போக்குவரத்து காவலர்களுக்கு அமைக்கப்பட்ட நவீன கழிவறை இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close