சென்னை: வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்க முயன்றவர் கைது 

  டேவிட்   | Last Modified : 31 Oct, 2018 09:58 am

smugler-arrested-at-chennai-airport

வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்க முயன்றதாகக் கூறி சாகுல் ஹமீது என்ற பயணியை 3 பிரிவுகளின் கீழ் விமான நிலைய காவல்துறையினர் கைது செய்தனர்.

துபாயில் இருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னை வந்தடைந்த விமானத்தில் சாகுல் ஹமீது என்ற பயணி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். வழக்கம் போல் விமான நிலையத்தில் சோதனை மேற்கொண்டு வந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடமும் சோதனை மேற்கொண்டனர். இதில் அவரிடம் 900 கிராம் கொண்ட 6 வளையல்கள் மற்றும் தங்க நகைகள் வைத்திருந்தார்.

இதனை தொடர்ந்து அவரை அமர வைத்த சுங்க அதிகாரிகள் வருமான வரித்துறைக்கு தகவல் அளித்தனர். அதனடிபடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் வந்த சாகுல் ஹமீதிடம் அவர் வைத்திருந்த நகைக்கான உரிய ஆவணங்களை கேட்டனர். மேலும் அவரிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்ய முயன்றபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சிறு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனையடுத்து சாகுல் ஹமீது மீது வருமானவரித்துறை அதிகாரிகளான ஆர்த்தோ ராஜேந்திரன், சாமுவேல் ஆகிய இரண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் 3 பிரிவுகளின் கீழ் சாகுல் ஹமீது மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சிறையில் அடைத்தனர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.