மதுரை: பெட்ரோல் குண்டு வீச்சு; காவல்துறை விசாரணை

  டேவிட்   | Last Modified : 31 Oct, 2018 06:09 pm
petrol-bomb-at-madurai

மதுரை  அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியில் முத்துக்குமார் என்பவரது வீட்டின் முன்பு இரண்டு பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. பெட்ரோல் வெடிகுண்டு வீசிய 2 அடையாளம் தெரியாத நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழ்நாடு அகமுடையார் சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளரான முத்துக்குமார் என்பவர்  மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியில்  தனக்கு சொந்தமான  வீட்டில் வசித்து வருகிறார். இவர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்து வருகிறார். 

இந்நிலையில், இன்று (அக்.31) மதியம் 1. 30 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் முத்துக்குமார் வீட்டின் மீது இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பி சென்றுள்ளனர்.  
தகவல் அறிந்த அவனியாபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி, குண்டு வீசியவர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close