சென்னையில் தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் சிறுமி பலி; பொதுமக்கள் சாலை மறியல்!

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 02:39 pm

chennai-villivakkam-child-dead-in-car-accident

சென்னை வில்லிவாக்கம் ஐ.சி.எபில் தாறுமாறாக ஓடிய கார் மோதி சுசி என்கிற 6 வயது சிறுமி உயிர் இழந்ததை அடுத்து, விபத்துக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

சென்னை வில்லிவாக்கம் தாகூர்நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (28) ,இவரது அண்ணன் மகளான 2 ஆம் வகுப்பு படிக்கும் சுசியுடன் (8) ஐசிஎப் சிக்னல் அருகே நேற்று மாலை மூன்று மணி அளவில் நடந்து வரும் பொழுது எதிரே அதிவேகத்தில் தாறுமாறாக வந்த கார், பிளாட்பாரம் மீது ஏறி நடந்து வந்த சுசி மற்றும் விஜயலட்சுமி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் கண்ட அங்கு இருந்த பொதுமக்கள் அதிவேகமாக ஓட்டி வந்த வாலிபரை அடித்து அவரது கார் கண்ணாடிகளையும் உடைத்தனர். 

படுகாயம் அடைந்த விஜயலட்சுமியை ஜி.எச்.மருத்துவமனையிலும், மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த சிறுமி சுசியை சிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். 

இந்த விபத்து குறித்து திருமங்கலம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுகிலா வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த அயனாவரம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மகனான சரணை கைது செய்தார். 

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமி சுசி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். விஜயலட்சுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ள நிலையில் விபத்துக்கு காரணமான சரணை காவல்துறையினர் நிபந்தனை ஜாமினில் விட்டதை கேள்விப்பட்ட அந்த பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் சுகிதா அவர்கள் கூறும் பொழுது, நேற்று பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த சரண் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் அவர் மீது 304/2 என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது நாளை அவரை கைது செய்ய உள்தாகவும் தெரிவித்தார். 

தொழில் அதிபரின் மகன் என்பதால் காவல்துறையினர் விபத்துக்கு காரணமான சரண்கோபால் மீது  நடவடிக்கை எடுக்க மெத்தனம் காட்டுவதாகவும், பணம் வாங்கி கொண்டு குற்றவாளியை காவல்துறையினர் தப்பிக்க வைப்பதாகவும் கூறி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close