கும்பகோணம்: ஆசிரியையை கொலை செய்தவன் கைது

  டேவிட்   | Last Modified : 02 Nov, 2018 02:59 pm
kumbakonam-teaacher-murder-case-1-arrested

கும்பகோணத்தில் நேற்று வசந்த பிரியா என்ற ஆசிரியையை கொலை செய்த வழக்கில் நந்தகுமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கும்பகோணத்தில் தனியார் பள்ளியில் பணியாற்றிவந்த வசந்த பிரியா வயது 25 என்ற  ஆசிரியைக்கும் அவரது அத்தை மகன் கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்நிலையில் நந்தகுமார் நல்ல வேலையில் இல்லாததால் வசந்த பிரியாவின் உறவினர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வேறு ஒரு மாப்பிள்ளைக்கு திருமணம் நிச்சயம் செய்துள்ளனர்.

இதனைக் கண்ட நந்தகுமார் வசந்த பிரியாவிடம் தன்னை திருமணம் செய்து வற்புறுத்தியுள்ளார். அதற்கு வசந்த பிரியா மறுக்கவே, அவரை கொலை செய்யும் திட்டத்தோடு நேற்று மாலை வசந்த பிரியா பணி புரியும் பள்ளிக்கு சென்று பள்ளி விட்டவுடன் வசந்த பிரியாவை தனது மோட்டார் சைக்கிளில் நந்தகுமார் அழைத்துச் சென்று கும்பகோணம் புறவழிச்சாலையில் உமாமகேஸ்வரபுரம் என்ற இடத்தில் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். சம்பவ இடத்திலேயே வசந்த பிரியா உயிரிழந்தார்.

தகவலறிந்த திருவிடைமருதூர் காவல்துறையினர் வசந்த பிரியாவின் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும் வசந்த பிரியாவின் செல்போனில் வந்த எண்களையும், பள்ளியின் வாசலில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்ததில் நந்தகுமார் வசந்த பிரியாவை அழைத்து செல்வதை பார்த்த காவல்துறையினர் நந்தகுமாரை நள்ளிரவு கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close