கும்பகோணம்: ஐந்தே முக்கால் அடி உயரம் கொண்ட தூண்டா விளக்கு

  டேவிட்   | Last Modified : 04 Nov, 2018 09:54 am
about-6-feet-height-light-manufactured-at-kumbakonam

திண்டுக்கல் மாவட்டம் ஜோதி மவுண சுவாமிகள் கோவிலில் வழிபாட்டிற்காக  திம்மக்குடியில் 3 உலோகங்களில்   ஐந்தே முக்கால் அடி உயரம் உள்ள தூண்டா விளக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. 

ஐம்பொன்னால் ஆன சிலைகள், விளக்குகள்  தயாரிப்புக்கு புகழ் பெற்றது கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை, திருவலஞ்சுழி, திம்மக்குடி ஆகிய இடங்களாகும். இங்கு உற்பத்தி ஆகும் பொருட்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் பெருமளவு அந்நிய செலாவணி ஈட்டப்படுகிறது. திம்மக்குடியில் உள்ள சிற்ப சாலை ஒன்றில் ஐந்தே முக்கால் அடி உயரத்திற்கு வெண்கலம்,பித்தளை,வெள்ளை பித்தளை, ஆகிய மூன்று உலோகங்களை கொண்டு இந்த தூண்டா விளக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் 155 கிலோ எடையில் தயாரிக்கப்பட்ட இந்த விளக்கில் தீபம் எரியும் பகுதி எண்ணையில் மிதக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த விளக்கில் உள்ள எண்ணெய் குறைய குறைய தீபம் எரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது . சுமார் மூன்று மாத காலத்தில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் உழைப்பில் இந்த நூதன விளக்கு  தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று மாத கால உழைப்பில் தயாரிக்கப்பட்ட இந்த விளக்கு திண்டுக்கல் மாவட்டம் கசவனம்பட்டி மௌன சுவாமிகள் கோவிலில் வழிபாட்டிற்காக வைக்கப்பட உள்ளது. எதிர்வரும் 10 மற்றும் 11 நாட்களில் கசவனம்பட்டி திண்டுக்கல் மாவட்டம்  கசவனம்பட்டி மௌன  சுவாமிகள் மடத்தில் குரு பூஜை நடைபெற உள்ளது அதில்  தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இருந்து சுமார் ஆயிரம் சாதுக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது அன்றைய தினம் இந்த விளக்கு அங்கு பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாக இந்த விளக்கை  தயாரித்த வரதராஜன் தெரிவித்துள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close