கும்பகோணம்: 3 கொள்ளையர்கள் கைது; 89 சவரன் பறிமுதல்

  டேவிட்   | Last Modified : 04 Nov, 2018 10:09 am
kumbakonam-robbery-3-arrested

கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் அருகே பல்வேறு இடங்களில் வழிப்பறி மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டு, 89 சவரன் நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

கும்பகோணம் அருகில் உள்ள நாச்சியார்கோவில் கடைவீதியில் நேற்றிரவு சந்தேகம் படும்படி நின்றிருந்த மூவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவிக்கவே, அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் பல்வேறு இடங்களில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து கொள்ளை சம்பவங்களில்ஈடுபட்டிருப்பதும், மருதாநல்லூர் என்ற இடத்தில் நிகழ்ந்த வழிப்பறியில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மூவரையும் காவல்துறையினர்  கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர் அப்போது, இவர்கள் திருநரையூர் ரமேஷ் ,திருமலை ராஜபுரத்தை சேர்ந்த ஜெயசீலன் , மேலூரைச் சேர்ந்த நீலகண்டன் என்ற விபரம் தெரியவந்தது. மேலும், இவர்கள் பதுக்கி வைத்திருந்த 89 சவரன் நகைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் 22 லட்ச ரூபாய் ஆகும். கைது செய்யப்பட்ட மூவரையும் கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  

மூவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, தொடர்ந்து மூவரும் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close