கும்பகோணம்: காதலர்களுக்கு அரிவாள் வெட்டு 

  டேவிட்   | Last Modified : 08 Nov, 2018 02:51 pm

kumbakonam-attempt-murder

கும்பகோணம் அருகில் உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயப் பூங்காவில் நேற்று இரவு காதலர்களாகிய திருப்பனந்தாளை சேர்ந்த குருமூர்த்தி என்பவரும் பட்டீஸ்வரத்தை சேர்ந்த ராஜலட்சுமியும் பூங்காவில் இருந்த பொழுது, பூங்காவிற்கு வந்த அடையாளம் தெரியாத நபர் இருவரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி விட்டார்.

அக்கம்பக்கத்தினர் இவர்களது அலறல் சத்தத்தை கேட்டு ஆம்புலன்ஸை வரவழைத்து, இவர்களை கும்பகோணம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .ராஜலட்சுமிக்கு தலையில் காயம் பட்டதால் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் .குருமூர்த்தி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த அரிவாள் வெட்டு சம்பவத்திற்கு காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஆணவ கொலை முயற்சிக்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது . வெட்டி விட்டு தப்பிய நபரை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.