வழக்குரைஞர்களுக்கு பணத்தை விட மக்கள் சேவையே முக்கியம்: நீதிபதி கிருபாகரன்

  Newstm Desk   | Last Modified : 17 Nov, 2018 04:27 pm
judge-kribakaran-speech

கட்டபஞ்சாயத்து வழக்குரைஞர்களாக மாற்ற மூளை சலவை செய்தாலும், அதற்கு செவி சாய்க்காமல் திடமாக இருக்க வேண்டும் என சட்டகல்லூரி பட்டமளிப்பு விழாவில் நீதிபதி கிருபாகரன் மாணவர்களுக்கு தெளிவாக அறிவுறுத்தினார். 

சென்னை யில் உள்ள அம்பேத்கர் சட்டகல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தலைமை உரையாற்றிய நீதிபதி கிருபாகரன், "வழக்குரைஞர்களின் பிரபஞ்சத்தில் நீங்கள்  இன்று முதல் இணைந்துள்ளீர்கள்.  அமெரிக்காவில் 25 வழக்குரைஞர்கள் குடியரசு தலைவராக பதவி வகித்துள்ளனர்.

தற்போது வழக்குரைஞர்கள், தங்கள் தொழில் மூலமாக உலகை தங்கள் கட்டுக்குள் வைத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் 75% மதிப்பெண் பெற்றவர்கள் தான் சட்டப்படிப்பு பயில சேர முடியும். ஆனால் குற்றவாளிகள் வேறு மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் சட்டம் பயின்றாகக் கூறி சட்ட படிப்பை விலைக்கு வாங்கி, தமிழகத்தில் பதிவு செய்வதோடு, பயிற்சியும் மேற்கொள்ளத் தொடங்கி விடுகின்றனர்.

அத்தகைய நபர்கள், முறையாக படித்து முடித்து பயிற்சி மேற்கொள்ள உங்களை கட்டபஞ்சாயத்து வழக்குரைஞராக மாற்ற மூளை சலவை செய்வார்கள். அதற்கு செவி சாய்க்காமல் நீங்கள் திடமாக இருக்க வேண்டும். இத்தகைய நபர்களின் செயல்கள் வழக்குரைஞர்களை மட்டுமின்றி அனைவரையும் பாதிக்கும் செயலாக உள்ளது.

வழக்குரைஞர் தொழிலில் நாம் இழந்து விட்ட மரியாதையை நீங்கள் தான் மீட்டெடுக்க வேண்டும்.  வழக்குரைஞர்களுக்கு பணத்தை விட மக்கள் சேவையே முக்கியம். மேலும்  நம் தேசத்தில் குடும்ப வாழ்வு, மற்றும் தம்பதியர் இணைந்து வாழ்வதற்கு காலம் காலமாக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.

அவசரப்பட்டோ, உணர்ச்சிவசப்பட்ட நிலையிலோ விவாகரத்து கோரி வரும் தம்பதிகளை சேர்த்து வைக்க முயற்சி செய்யுங்கள்" என  மாணவர்களுக்கு நீதிபதி கிருபாகரன் அறிவுரை வழங்கி உரையாற்றினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close