சென்னை வளசரவாக்கத்தில் செல்போன், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 4 சிறுவர்கள் கைது.

  Newstm Desk   | Last Modified : 18 Nov, 2018 05:34 pm
four-boys-arrested-for-cell-phone-and-bike-robberies-in-chennai

சென்னை வளசரவாக்கத்தில் செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட வந்த 4 சிறுவர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 40 செல்போன்கள், 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக வளசரவாக்கம், போரூர், ராமாபுரம், மதுரவாயல், வானகரம் ஆகிய பகுதிகளில் செல்போன்களை வழிப்பறி செய்வதாக வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, உதவி ஆய்வாளர் சம்பத் தலைமையில், ஆய்வாளர் அமுதா தனிப்படை அமைத்து தேடி வந்தனர். 

அப்போது,  சென்னை வளசரவாக்கம் ராமாபுரம் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஏற்கனவே செல்போன் திருட்டு வழக்கில் கைதாகி இருந்த  ஆதாம் என்பவர் சுற்றி திரிவது போல் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து, ஆதாமிடம் விசாரணை நடத்தியதில், அவரது கூட்டாளிகளுடன் செல்போன் மற்றும் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர், அவர்களிடம் இருந்த  40 செல்போன்கள், 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், இது குறித்து ஆதாம் (17), பாலாஜி (17) , சௌந்தர் (17) மற்றும் செல்வபிரபா (15) ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் ஆதாம் சென்னை வளசரவாக்கம் பகுதியில் நடந்து சென்ற பெண் ஒருவரிடம் 4 சவரன் தங்க நகையை வழிப்பறி செய்துள்ளதோடு,  ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவன்  என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close