மதுரை அதிமுக நிர்வாகிகள் சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள்!

  Newstm Desk   | Last Modified : 25 Nov, 2018 04:23 pm
for-madurai-aiadmk-executives-rs-40-lakh-worth-of-relief-materials

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதுரை வடக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு தண்ணீர், அரிசி மூட்டைகள், மளிகை பொருட்கள், போர்வைகள், பிஸ்கட் பாக்கெட்டுகள், பழங்கள் என ரூ.30 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் 6 லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இதனை மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கொடியசைத்து அனுப்பி வைத்தார். 

இதேபோல், மதுரை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் 2 லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close