பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி சென்னையில் அறப்போராட்டம்...!

  Newstm Desk   | Last Modified : 26 Nov, 2018 12:59 pm
to-protect-the-fireworks-industry

நலிந்து வரும் பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி, சென்னையில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் அறப்போராட்டம் நடைபெற்றது.

உச்ச நீதிமன்றம் பட்டாசு உற்பத்திக்கு விதித்துள்ள கட்டுப்பாட்டால், சிவகாசியில் 1070க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கவில்லை. இதனால் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி உள்ளனர். இந்நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகள், 1986ல் விதி எண் 3 3(B)யில் உள்ளபடி, பட்டாசு உபயோகம் தனித்தன்மையான நிகழ்ச்சி என வகைபடுத்தி, பட்டாசுக்கு மத்திய, மாநில அரசுகள் விலக்கு அளிக்க சட்டம் இயற்றி பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என பட்டாசு வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழ்நாடு  பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில், 3,000க்கும் மேற்பட்ட பட்டாசு வியாபாரிகள் கோரிக்கையை வலியுறுத்தி அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு விசாரணையின் போது, அரசு சிறப்பான வாதங்களை எடுத்து வைக்க வேண்டும். இல்லையெனில் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வியாபாரிகள் தெரிவித்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close