கத்தி காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்த நபர் குண்டர் சட்டத்தில் கைது!

  Newstm Desk   | Last Modified : 29 Nov, 2018 05:04 pm

the-knife-indicator-extortion-jewelry-robbery-bandit-arrested-in-the-thug

சேலத்தில், வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி முதியவர்களிடம் இருந்து நகைகளை பறித்து சென்ற சதீஷை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சேலம் மாவட்டம் இரும்பாலையை அடுத்த தும்பாதுளிப்பட்டி மேல்காட்டில் வசித்து வரும் முதியவர் வீட்டில் கடந்த மே மாதம் அத்துமீறி நுழைந்த சதீஸ் மற்றும் அவரது கூட்டாளி, முதியவர்களை மிரட்டி 8 பவுன் தாலி செயின் மற்றும் பீரோவில் இருந்த ஐந்தரை பவுன் தங்க நகையை பறித்து சென்றார்.  இது குறித்து இரும்பாலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில், கடந்த 31ம் தேதி சேலம்-தாரமங்கலம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் தாலி செயினை பறித்த போது, பொதுமக்கள் சதீஷை மடக்கி பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.  விசாரணையில், சதிஷ் வழிப்பறி,கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்த நகைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர். சதீஷ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இன்று சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close