காடுவெட்டி குருவின் குடும்பத்திற்கு ராமதாஸ் இடையூறு?

  டேவிட்   | Last Modified : 29 Nov, 2018 08:50 pm
ramadoss-creating-problem-in-kaaduvetti-guru-s-family

காடுவெட்டி குருவின் சகோதரி மகன் மனோஜ்கிரனுக்கும், தனது மகள் விருதாம்பிகைக்கும் நேற்று கும்பகோணத்தில் திருமணம் நடைபெற்றது . இத்திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாமக தலைவர் தங்கள் குடும்பத்திற்கு இடையூறு தருவதாகவும் காடுவெட்டி கிராமத்தில் தங்கள் குடும்பத்தினரை துன்புறுத்தி வருவதாகவும் இன்று குருவின், மகள், மகன், மருமகன், சகோதரி ஆகியோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

300 கோடி ரூபாய் மதிப்பிலான வன்னியர் சங்க அறக்கட்டளை சொத்துக்களுக்காகத் தான் தங்கள் திருமணத்தை பாமக தலைவர் ராமதாஸ் எதிர்ப்பதாகவும் , திருமணம் எங்களது விருப்பப் படி தான் நடைபெற்றது எனவும் காடுவெட்டி குருவின் மகள் விருத்தாம்பிகை செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். 

எங்களை காடுவெட்டி கிராமத்திற்குள் நுழைய விடக்கூடாது என்பதற்காக அடியாட்கள் காடுவெட்டி கிராமத்தில் தங்கி இருப்பதாகவும், இதற்கு காரணம் பாமக தலைவர் ராமதாஸ்  என்றும் குருவின் மருமகன் மனோஜ்கிரன் தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close