சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர்களுக்கு ரயில்வே மேலாளர் பாராட்டு

  டேவிட்   | Last Modified : 29 Nov, 2018 09:20 pm
rail-drivers-felicitated-by-southeran-railway-general-manager

சிறப்பாக பணியாற்றிய  சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள இயந்திரவியல் துறையை சேர்ந்த ரயில் ஓட்டுனர்களுக்கு  தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குல்ஷேத்ரா சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார், 

கடந்த நவம்பர் மாதம் 5ம் தேதி  சேலம் கோட்டத்தை சேர்ந்த ரயில் ஓட்டுனர்கள் அருண்குமார் மற்றும் அசிம் அகமது ஆகியோர் ஈரோடில் இருந்து ஜோலார்பேட்டை மார்க்கமாக  கூட்ஸ் ரெயிலை ஓட்டினார், கூட்ஸ் ரெயில் வேலூர் மாவட்டம் காங்கரை ரெயில் நிலையம் அருகே சென்றது. அப்போது தண்டவாளத்தில் பெரும்  அதிர்வு ஏற்படுதை ஓட்டுனர்கள் உணர்ந்தனர்,

இதுகுறித்து உடனடியாக  நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து,  நிலைய மேலாளர் சேலம் ரெயில்வே கோட்டம் கண்ட்ரோல் அறைக்கு தகவல் தெரிவித்தார். சேலம் ரெயில்வே கோட்ட ரெயில்வே பொறியாளர்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை  உடனடியாக சரி செய்தனர் .

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது, சிறப்பாக பணியாற்றி சான்றிதழ் பெற்ற ஓட்டுனர்கள்  அருண்குமார் மற்றும் அசிம் அகமது ஆகியோரை சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் வெகுவாக பாராட்டினார்,

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close