நாகநாத சுவாமி கோவில்: கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 12:37 pm

naganada-swamy-temple-karthikai-last-sunday-is-celebrated-with-a-grand-celebration

கும்பகோணம் நாகநாதசுவாமி கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி ஆலயம் நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கான பரிகார தலமாக விளங்குகிறது. இந்த ஆலயத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா. ஆண்டுதோறும் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வரும் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று நாகநாத சுவாமி ஆலயத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. 45 அடி உயரமுள்ள நந்தி உருவம் பொறித்த கொடி வேத மந்திரங்கள் முழங்க ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close