மதுரை: பாஜக மாநில மகளிர் அணி தலைவி வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு

  அனிதா   | Last Modified : 30 Nov, 2018 01:00 pm
madurai-bjp-state-women-s-team-leader-before-housing-on-petrol-bomb-range

மதுரையில் பா.ஜ.க மாநில மகளிர் அணித்தலைவி கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் பங்கஜம் காலனி, திருமகள் நகரில் வசித்து வருபவர் தமிழக பாஜக மாநில மகளிரணி தலைவி மகாலட்சுமி. இவர் வழக்கம் போல் தனது காரை வீட்டு முன்பு நிறுத்திருந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் பங்கர சத்தம் கேட்டது. உடனே எதிர்வீட்டில் இருந்த காவலாளி வெளியே வந்து பார்த்தபோது, மகாலட்சுமியின் கார் மீது மர்ம நபர்கள் 2 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. 

பெட்ரோல் குண்டு காரின் மேல்பகுதியில் பட்டு வெடித்ததால் காரின் சில பகுதிகளில் லேசான சேதம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த தெப்பக் குளம் காவல்துறையினர்,  2 பெட்ரோல் பாட்டில்களை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close