தமிழர்களின் மானத்தை வாங்க டெல்லி சென்றுள்ளனர்: விவசாயிகள் போராட்டம் குறித்து பொன்னார்

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 09:50 am
pon-radhakrishnan-about-tmail-farmers-who-are-in-kisan-march

நாட்டின் தலைநகரில் தமிழர்களின் மானத்தை வாங்க சிலர் சென்றுள்ளது மன்னிக்க முடியாத குற்றம் என டெல்லி போராட்டத்தில் விவசாயிகள் பங்கேற்றுள்ளது குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். 

 கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட தமிழகத்தைச் சேர்ந்த சில கட்சிகள் நிதியுதவி செய்கின்றனர். தமிழகத்தின் மானத்தை வாங்க சிலர் தலைநகருக்கு சென்றுள்ளனர்.  காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது ஏற்று கொள்ள முடியாதது. ஆய்வறிக்கை தயாரிக்க மட்டுமே மத்திய அரசு அனுமதி தந்துள்ளது" என்றார். 

மேலும் கஜா புயல் நிவாரணம் குறித்து உள்துறை இணையமைச்சரிடம் பேசியுள்ளதாகவும்,  கூடிய விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close