ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் 2 வயது சிறுவன் உயிரிழப்பு!

  அனிதா   | Last Modified : 01 Dec, 2018 11:43 am
2-year-old-boy-died-due-to-lack-of-doctors-at-primary-health-center

வளநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் காய்ச்சலால் 2 வயது சிறுவன் உயிரிழக்க நேரிட்டதாக கூறி, உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கொடும்பட்டியைச் சேர்ந்தவர் சின்னவர். இவரது 2 வயது மகன் பழனிவேலுக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால், உடனடியாக நேற்று மாலை வளநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தான். இதையடுத்து சிறுவனின் உடலை குடும்பத்தினர் வீட்டிற்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில், சிறுவன் உயிரிழந்த தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் தான் சிறுவன் உயிரிழக்க நேர்ந்தது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி  வளநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த, காவல்துறையினர் மற்றும் மருத்துவ அதிகாரிகள், மருத்துவர்கள் எப்போதும் பணியில் இருக்க நடவடிக்கை எடுப்பதோடு கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close