நெல்லை மாநகர காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாம் தொடக்கம்

  அனிதா   | Last Modified : 01 Dec, 2018 12:14 pm
start-of-the-police-masters-training-camp-in-nellai

நெல்லை மாநகர காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாமை மாநகர காவல்துறை ஆணையர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். 

திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாகத்தில் மாநகர காவல்துறை ஆணையாளர் கபில் குமார் உத்தரவின் பேரில் இன்று காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாம் தொடங்கியது. இதில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் ஸ்ரீநிதி கலந்துகொண்டு காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆயுதப் படை உதவி ஆணையாளர் வடிவேல், மதுவிலக்கு கூடுதல் துணை ஆணையாளர் குமாரவேல், மாவட்ட ஆயுதப்படை உதவி கண்காணிப்பாளர் சங்கரநாராயணர், நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளர் நாகாசங்கர், நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், ஆயுதப்படை ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close