சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 12:58 pm
fire-accident-in-apartment-building

சென்னையில், அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பாடி மேம்பாலம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 18 வது தளத்தில் மின்கசிவு காரணமாக இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்தார். இரண்டு பேர்  மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த தீ விபத்துக்கு மின் கசிவு தான் காரணமா? அல்லது வேறேதும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close