மாணவியின் கல்விக்கு உதவிய மாவட்ட ஆட்சியர் ரோகிணி

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 03:14 pm
the-district-collector-rohini-came-to-the-bank-for-educational-support-of-the-student

சேலத்தில் மாணவி ஒருவரின் கல்விக்காக  மாவட்ட ஆட்சியர் ரோகிணி நேராக வங்கிக்கு சென்று உதவியளித்துள்ளார். 

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சகானாஸ் பேகம். இவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகிறார். இவர் கல்வி கட்டணம் கட்டமுடியாததால், சில மாதங்களாக கல்லூரிக்கு செல்லவில்லை. இதையடுத்து உதவிக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் அவர் மனு அளித்திருந்தார். இந்நிலையில், மாணவியின் படிப்பிற்காக வங்கியில் கடன் பெற வழிவகை செய்த மாவட்ட ஆட்சியர் ரோகிணி, இன்று அழகாபுரம் பகுதியில் உள்ள இந்தியன் வங்கிக்கு நேரில் வந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலையை பெற்று மாணவியிடம் வழங்கினார். 

அப்போது, கண்ணீர் சிந்திய மாணவியின் கண்களை துடைத்துவிட்டு, படிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், பெண்களுக்கு எந்தவொரு காலகட்டத்திலும் கல்வி கிடைக்காத ஒன்றாக ஆகிவிடக்கூடாது. ஆகவே தான் உதவி செய்தேன். இதை மாவட்ட ஆட்சியராக செய்யவில்லை. பெண்ணின் சக தோழியாக  உதவினேன் என கண்ணீர் மல்க தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close