வரலாற்று பெயர்களை மாற்றுவதை நிறுத்துக: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கூட்டத்தில் தீர்மானம்!

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 04:26 pm

tamil-nadu-thowheed-jamath-meeting

கும்பகோணத்தில் சோழபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் செயல்வீரர் கூட்டம் சோழபுரம் தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது. வருகின்ற 2019 ஜனவரி 27ம் தேதி விழுப்புரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாநாடு நடைபெறுகிறது. 

அந்த மாநாட்டில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் மீண்டும் அங்கு பள்ளி கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் விரைவாக விசாரணை செய்து முறையான ஆவணங்கள் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டும் அயோத்தியில் அத்து மீறி செயல்படும் இந்து அமைப்புகளை உச்சநீதிமன்றம் தடுக்க வேண்டும். கஜா புயலில் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி சேர்ந்த விவசாயிகளுக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

வீடு வாசல்களை இழந்து குடும்பத்தார்களுக்கு முழுமையாக வீடு கட்டித்தர வேண்டும். கஜா புயலில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இதுவரை ஒரு கோடியே 75 லட்சம் செலவில் நிவாரண பொருட்கள் மதிய உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. 

மேலும்  இப்பணிகள் தொடரும் பாதிக்கப்பட்ட மக்களை இதுவரை பிரதமர் மோடி சந்திக்காதது கண்டனத்துக்குரியது. சோழபுரத்தில் அரசு சுகாதார மையம் புதிய கட்டிடம் உடனடியாக கட்டிட மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தஞ்சை மாவட்டம் சார்பில் கஜா புயலுக்கு 12 லட்சம் வழங்கப்பட்டது. உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அலகாபாத் நகரின் பெயரை பிரயாகராஜ் என்று மாற்றியதும் அடுத்த முகல் சராய் சந்திப்பு என்ற பெயரை தீனதயாள் உபத்யாய சந்திப் என்று மாற்றியதும் பைசாபாத் என்ற பெயரை அயோத்யா என்றும் பெயர் மாற்றுவதும் கண்டிக்கத்தக்கது.

யோகியின் பெயர் மாற்றம் செல்லும் வேகத்தை பார்த்தால் அது தேசத்தை தடம் கவிழ்த்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. உடனடியாக வரலாற்று சிறப்புமிக்க ஊரின் பெயர்களை அகற்றுவதை யோகி அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. செயல்வீரர் கூட்டத்தில் மாநிலச் செயலாளர் சையது மாநில துணைத்தலைவர் ரகுமான் மாநில பொதுச்செயலாளர் முஹம்மது மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close