சென்னையில் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய ரவுடி கைது...!

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 03:44 pm
rowdy-little-john-arrested-in-chennai

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வழிப்பறி, கொள்ளை மற்றும் கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி லிட்டில் ஜான் என்பவரை எம்.ஜி.ஆர் நகர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் காவல்துறையினர்  இன்று ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தவரை விசாரிக்க முற்பட்ட போது, அவர் தப்பி ஓட முயற்சித்தார். இதையடுத்து காவல்துறையினர் அவரை துரத்தி சென்று பிடித்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் அம்பத்தூரை சேர்ந்த லிட்டில் ஜான் என்பதும், கொளத்தூர், விருகம்பாக்கம், ராயப்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற 29 வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகளிலும், 2 கொலை வழக்குகளிலும் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close