சேலம் வெல்ல மண்டியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு....

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 03:56 pm
inspection-of-food-safety-officers-in-salem-jaggery-market

சேலம் வெல்ல மண்டியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், ரூ.5 லட்சம் மதிப்பிலான 10,000 கிலோ வெல்லம் மற்றும் 35 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

சேலம் மாவட்டத்தில் விளையும் கரும்புகளை கொண்டு வெல்லம் தயாரிக்கப்படுவதால், இங்குள்ள வெல்லத்திற்கு தனி மவுசு.  தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழ்நிலையில், விதிமுறைகளுக்கு மாறாக சர்க்கரை மற்றும் பாஸ்போர்ட் உரத்தை பயன்படுத்தி அதிகளவில் வெல்லம் தயாரிக்கப்பட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சேலம் செவ்வாய்ப்பேட்டை மூலப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள வெல்ல சந்தையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று சோதனை செய்தனர். அப்போது, அதிக அளவில் சர்க்கரை கலந்து வெல்லம் தயாரிக்கபட்டதோடு வெல்லம் தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் காலாவதியாகும் தேதி ஆகியவை குறிப்பிடப்படாமல் இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, சுமார் 10,000 கிலோ வெல்லம் மற்றும் வெல்லத்தை ஏற்றிவந்த 35க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் வெல்லம் பகுப்பாய்வுக்காக மாதிரிகள் எடுத்து அனுப்பி வைத்தனர். ஆய்வு முடிவுகள் வந்தபிறகே கலப்படம் குறித்து தெரியும் எனவும்,கரும்பு விவசாயிகள் விதிமுறைக்கு மாறாக வெல்லத்தை கலப்படம் செய்து தயாரிப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close