பாபநாசம் கிளை சிறைச்சாலையில் ஆய்வு

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 04:20 pm
inspection-in-papanasam-branch-prison

பாபநாசம் கிளை சிறைச்சாலையில் சிறைத்துறை கண்காணிப்பாளர் இன்று ஆய்வு மேற்கொண்டார். 

தஞ்சை மாவட்டத்திலேயே தரம் உயர்த்தப்பட்ட சிறைச்சாலையாக பாபநாசம் கிளை சிறைச்சாலை விளங்குகிறது. இந்த சிறையில் ஆண்டுதோறும் ஆய்வு நடைபெறுவது வழக்கம். அதனடிப்படையில், சிறைசாலையின் கட்டுப்பாட்டு அலுவலரும், சிறைத்துறை கண்காணிப்பாளருமான ருக்மணி பிரியதர்ஷினி இன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது,  சிறைச்சாலையில் உள்ள வருடாந்திர பதிவேடுகள், மற்றும் சிறைவாசிகளின் குறைபாடுகள் குறித்த பதிவுகளை பார்வையிட்டார். 

முன்னதாக சிறைக் காவலர்களின்  அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட ருக்மணி பிரியதர்ஷினி, சிறைச்சாலையின் உள் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close