அரசியலில் கமல் ஹாசன் ஒரு கத்துக் குட்டி: அமைச்சர் செல்லூர் ராஜு

  டேவிட்   | Last Modified : 01 Dec, 2018 05:16 pm
sellur-raju-about-kamal-hassan

கமல் ஹாசன் தனது ஒவ்வொரு பேட்டியின் போதும், அரசை குறை சொல்வதே வழக்கமானதாக கொண்டுள்ளார் என கூட்டுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 

மதுரையில் இருந்து கஜா புயலால் பாதித்த  மாவட்டங்களுக்கு ரூ.40 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று வழங்கினார்.

மதுரையில் இருந்து திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரூ.40 லட்சம் மதிப்புள்ள அரிசி, பிஸ்கட்,   வேஷ்டி, சட்டை, சேலை உணவுப் பொருள்களை ஆகியவற்றை லாரிகள் மூலமாக இன்று அனுப்பி வைக்கப்பட்டது. 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு, கஜா புயலால் பாதக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டு , நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். 

எதிர்க்கட்சிகள் குறைசொல்வது தங்களை சுய விளம்பரப்படுத்திக் கொள்ளத் தான் என குறிப்பிட்ட செல்லூர் ராஜு, கமல் ஹாசன் தனது ஒவ்வொரு பேட்டியின் போதும், அரசை குறை சொல்வதே வழக்கமானதாக கொண்டுள்ளார் எனவும் அரசியலில் கமல் ஹாசன் ஒரு கத்துக்குட்டி எனக் கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close