சேலம்: உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு மனித சங்கிலி

  டேவிட்   | Last Modified : 01 Dec, 2018 05:32 pm

salem-human-chain-in-connection-with-world-aids-day

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மனித சங்கிலியில் மாவட்ட ஆட்சியர் ரோகினி பங்கேற்றார். 

ஆண்டுதோறும் டிசம்பர் ஒன்றாம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று சேலம் அரசு மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாபெரும் மனித சங்கிலியில் ஈடுபட்டனர். இதனை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். மனித சங்கிலியில் எச்ஐவி குறித்து பொதுமக்களிடையே உள்ள அபாய நோக்கத்தினை தெளிவுபடுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தியும், உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்வும் நடைபெற்றதன. இதில், 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

மேலும், சேலம் அரசு அதிநவீன சிறப்பு மருத்துவமனையில் ஹெச் ஐ வி கிருமிகளின் அளவை கணக்கிடும் உபகரணம்  பயன்பாடு இன்று முதல் தொடங்கப்பட்டது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close