கெட்டுப்போன கறி விவகாரம்: மேலும் 3 பேர் கைது

  டேவிட்   | Last Modified : 01 Dec, 2018 08:06 pm
dog-meat-case-3-arrested

நாய்கறி என்று கூறப்பட்ட விவகாரத்தில் ஜோத்பூர் சென்ற ரயில்வே பாதுகாப்பு படையின் தனிப்படை மூலம் இந்த வழக்கில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த மாதம் 17ம் தேதி ஜோத்ப்பூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்த ரயிலில் 12 பெட்டிகளில் கெட்டுப்போன நிலையில் ஆட்டிறைச்சி கொண்டுவரப்பட்டது. கொண்டுவரப்பட்ட இறைச்சி நாய் இறைச்சியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்ததையடுத்து உடனடியாக கால்நடை வல்லுநர்கள் அந்த இறைச்சியை ஆய்வுக்குட்படுத்தினர்.

ஆய்வின் முடிவில் அது ஆட்டிறைச்சி என உறுதி செய்யப்பட்டது எனினும் கெட்டுப்போன ஆட்டு இறைச்சியயை கொண்டுவந்ததற்காகவும் அதேபோல மீன் என்று குறிப்பிடப்பட்டு இறைச்சியைக் கொண்டு வந்ததாகவும் சென்னையை சேர்ந்த கணேசன், ஜெய்சங்கர் ஆகிய இருவர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில்  இறைச்சியை அனுப்பியவர்களை பிடிப்பதற்காக கடந்த வாரம் ரயில்வே பாதுகாப்பு படையின் தனிப்படை ஜோத்பூர் சென்றது.

அங்கு நடைபெற்ற விசாரணையில் வழக்கில் தொடர்புடைய ஜோத்பூரை சேர்ந்த இம்ரான்கான், காந்திகிராமை சேர்ந்த முன்னா குரேஷி ஆகிய இருவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். அவர்கள் அளித்த தகவலின் படி சென்னயில் இறைச்சியை பெற்றுக்கொள்வதற்காக பெயரிடப்படடிருந்த உஸ்மான் பாஷா என்பவரிடம் விசாரணை நடத்தியதில் கெட்டுப்போன இறைச்சி என ஒத்துகொண்டுள்ளார். மேலும் மீன் என பதிவு செய்திருந்தால் அதிகாரிகள் சோதனை நடத்தமாட்டார்கள் என்பதற்காக இவ்வாறு பதிவு செய்து அனுப்புவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close