தம்பதிகளை கொலை செய்த கொலையாளி, மனைவி புகைப்படம் வெளியானது

  டேவிட்   | Last Modified : 01 Dec, 2018 08:19 pm

photos-of-accused-and-his-wife-released-by-police

ஆவடியில் வயதான தம்பதிகளை கொலை செய்து தப்பிய கொலையாளி மற்றும் அவரது மனைவியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 27ஆம் தேதி ஆவடி காவல் நிலைய எல்லையில் சேக்காடு, ஐயப்பன் நகர் மெயின் ரோடு அருகில் வசித்துவந்த ஜெகதீசன் (67) மற்றும் விலாசினி (58) இருவரையும் அவர்களது வீட்டிலேயே  அடையாளம் தெரியாத நபர்  கொலை செய்துவிட்டு வீட்டில் உள்ள  பொருட்களையும்   கொள்ளையடித்து சென்றுள்ளனர்.  இது சம்பந்தமாக ஆவடி காவல் நிலையத்தில் குற்ற எண் 847/18 சட்டப்பிரிவு 457,380, 302 (ஆதாயக் கொலை) இ.த.ச.வழக்கின் கீழ் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அவரது வீட்டில் வேலை செய்து வந்த சுரேஷ்குமார் (28), அவரது மனைவி லட்சுமி (22),  அவர்களது குழந்தை சதீஷ்  (3) ஆகிய மூவரும் அன்று முதல் காணவில்லை மேற்கண்ட நபர்களை  போலீசார் தேடி வந்த நிலையில் சுரேஷ் குமார் என்பவர் மீது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம்  காவல்நிலையத்தில் 20க்கும் மேற்பட்ட  கொள்ளை வழக்குகள்  உள்ளது தெரியவந்துள்ளது. 

மேலும் சுரேஷ் குமார் என்பவர் 11.9.2017 அன்று விசாகப்பட்டினத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது காவல் பணிக்கு வந்த போலீசாரை தாக்கி விட்டு ஓடியுள்ளார். இது சம்பந்தமாக விசாகப்பட்டினம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அன்று முதல் சுரேஷ்குமாரை தேடி வருகின்றனர். தற்போது இவர்களது புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் சம்பந்தமாக ஏதேனும் தகவல் தெரிந்தால் ஆவடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close