சென்னையில் நாடார் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 02:53 pm
the-hunger-strike-on-behalf-of-nadar-sangam-in-chennai

பாடப்புத்தகத்தில் நாடார் சமுதாயம் குறித்து இடம் பெற்றுள்ள வரலாற்று பாடத்தை நீக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில், நாடார் மக்கள் சக்தி மற்றும் ஒருங்கிணைந்த நாடார் சங்கங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீக்க வேண்டும், சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நாடார் சமுதாயம் குறித்து இடம்பெற்றுள்ள வரலாற்று பாடத்தை நீக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பத்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த உண்ணாவிரத போராட்டத்தில், பாமக சார்பில் தலைவர் ஜி. கே மணி, துணை பொதுச்செயலாளர் ஏ.கே மூர்த்தி, அமைச்சர் பாண்டியராஜன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமாரி ஆனந்தன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர் தனபாலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close