மணமகன் தற்கொலை...திருச்சியில் பரபரப்பு...!

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 03:26 pm
the-groom-is-suicide-in-trichy

திருச்சியில் இன்று திருமணமாக இருந்த மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(30). இவர் ஐ.டி.ஐ முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டு நேற்று இரவு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணமகனை காணாமல் குடும்பத்தினர் தேடியுள்ளனர். அப்போது, தினேஷ் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை, மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து தகவலறிந்து வந்து காவல்துறையினர், தினேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இருவரின் சம்மதத்துடனே திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் திணேஷ் தற்கொலை செய்து கொண்டது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் தன்னை விட அதிகமாக படித்திருப்பதால் தாழ்வு மனப்பான்மையில் தினேஷ் தற்கொலை செய்து இருக்கலாம் என அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close