பசுமை இந்தியா குறித்த விழிப்புணர்வு மாரத்தான் : 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

  அனிதா   | Last Modified : 02 Dec, 2018 05:38 pm
awareness-on-green-india-marathon-more-than-500-participants

பசுமை இந்தியா என்ற தலைப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 

உலக வெப்பமயமாதல், நீர், காற்று மாசுபாடு ஆகியவை மனிதர்களுக்கு பெரிய சவாலாக உள்ளது. இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை, கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி சார்பில் பசுமை இந்தியா என்ற தலைப்பில்,    மாராத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.  

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என தனித்தனி பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.  அப்போது பேசிய கல்லூரி தலைவர் கே.பி.ராமசாமி, "அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டு செல்ல கூடிய ஒன்று மரம் மட்டுமே. எனவே இயற்கையோடு மனிதன் ஒன்றி வாழ வேண்டும்" என தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close