பேச்சுவார்த்தை தோல்வி - மாற்று திறனாளி சங்க கூட்டமைப்பு சார்பில் நாளை போராட்டம்

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 06:53 pm

negotiation-failure-announcing-struggle-will-be-held-on-tomorrow

பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, ஏற்கனவே அறிவித்தபடி நாளை போராட்டம் நடைபெறும் என மாற்று திறனாளி சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.  

தொகுப்பூதிய அடிப்படையில் வேலை செய்யும் மாற்று திறனாளிகளுக்கு இரண்டு வருட காலத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும். மாற்று திறனாளிகள் உரிமை சட்டத்தை  தங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்று திறனாளிகள் தினமான டிச.3ம் தேதியை கருப்பு தினமாக அறிவித்து போராட்டம் நடைபெறும் என மாற்று திறனாளி சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மாற்று திறனாளிகள் ஆணையர் மகேஸ்வரியுடன் கூட்டமைப்பினர் இன்று கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து ஏற்கனவே அறிவித்தப்படி நாளை போராட்டம் நடைபெறும் என சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மனோகரன் தெரிவித்துள்ளார். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close