திருச்சி விமான நிலையத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க காசுகள் பறிமுதல்

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 08:59 am
the-gold-coins-worth-rs-5-lakh-were-seized-at-trichy-airport

திருச்சி விமான நிலையத்தில் ரூ.4.88 லட்சம் மதிப்புள்ள தங்க காசுகளை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மலேசியா கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ விமானத்தில்  திருச்சி வந்த பயணிகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சாதிக்அலி என்பவர் மறைத்து எடுத்து வந்த ரூ.4.88 லட்சம் மதிப்பிலான 160 கிராம் தங்க காசுகள் மற்றும் ஒரு செயினை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சாதிக் அலியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதேபோல், நேற்று அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, திருவாரூரை சேர்ந்த அகமதுகான், புதுக்கோட்டையை சேர்ந்த அடைக்கலம், குலசேகரபட்டினத்தை சேர்ந்த அப்துல்காதர், மற்றுமொரு பயணி என 4 பேரிடமிருந்து ரூ.10.49 லட்சம் மதிப்புள்ள 345 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிட்டதக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close