நாகை: நிவாரண முகாம்கள் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை

  அனிதா   | Last Modified : 03 Dec, 2018 09:33 am
holiday-for-schools-in-relief-camps-in-nagai

நாகை மாவட்டத்தில் நிவாரண முகாம்கள் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தை தாக்கிய கஜா புயல் காரணமாக, 12 மாவட்டங்கள் பெரும் பாதிப்புள்ளாகின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால், நாகை, புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்திருந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் பள்ளி, மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கி வந்தன. 

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கும், சீரமைப்பு பணிகள் நடைபெறும் பள்ளிகளுக்கும்  மட்டும் இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close