சென்னையில் மாற்றுத்தினாளிகள் போராட்டம்

  அனிதா   | Last Modified : 03 Dec, 2018 01:12 pm
handicapped-persons-struggle-in-chennai

சென்னையில், 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பை சேர்ந்த 300 க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் முன்பு, மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பினர் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், 2016 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்காக மத்திய அரசு கொண்டுவந்த திட்டத்தை, மாநில அரசு முழுமையாக ஏற்றுக்கொண்டு அதை நடைமுறைபடுத்த வேண்டும், தமிழ்நாடு அரசு பணிகளில் பகுதி நேர பணியாளராக பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாற்றுத்திறனாளிகள் ஆணையருக்கு நீதிபதி அந்தஸ்துடன் அதிகாரங்கள் வழங்க வேண்டும் ஆகிய 3 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 300 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது கோரிக்கைகளை அமல்படுத்தி நிறைவேற்றும் வரை தங்களது போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close