குடிபோதையில் மனைவியை அடித்து கொன்ற கணவன்..

  அனிதா   | Last Modified : 03 Dec, 2018 01:33 pm

husband-killed-wife

கும்பகோணத்தில், குடிபோதையில் மனைவியை கடப்பாரையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பேகோணம், கொத்தங்குடி அருகே உள்ள தட்டுமால் கீழத் தெருவில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவருக்கு சாட்சிநாதன் (7), சட்ட நாதன் (6) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர் அவரது மனைவி ஜெயந்தி மீது சந்தேகப்பட்டு தொடர்ந்து அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு குடிபோதையில், மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட சுப்பிரமணியன் அவரை கடப்பாரையால் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஜெயந்தி உயிரிழந்தார். 

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், ஜெயந்தியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதுமட்டுமின்றி கொலை செய்துவிட்டு தப்பியோடியிருந்த சுப்பிரமணியனை, போலீசார் இன்று காலை தேடிப்பிடித்து கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.