கல்குவாரியால் 5 கிராமம் பாதிக்கப்படும் என மக்கள் கவலை

  அனிதா   | Last Modified : 03 Dec, 2018 04:01 pm
people-are-worried-that-stone-quarrying-will-be-affected-by-5-villages

அரியூர் மலையடிவாரத்தில் கல்குவாரி அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என 5 கிராம மக்கள் ஒன்று சேர்ந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, வடக்கு புதூர் ஊராட்சிக்குட்பட்ட தோணுகல் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்திற்கு அரியூர் கிராமத்தில் உள்ள மலையில் இருந்து மழை காலங்களில் தண்ணீர் வரும். இந்நிலையில், அரியூர் மலையடிவாரத்தில் வடக்கு புதூர் கிராமத்தைச் சேர்ந்த செங்கல் சூளை அதிபருக்கு கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த கல்குவாரி அமைக்கப்பட்டால், மழை நீர் தடைபட்டு குளத்திற்கு தண்ணீர் வராது என்றும், இதனால், 452 ஏக்கரில்  பயிர் செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் தட்டுபாடு நிலவும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.  இந்நிலையில், கல்குவாரி அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி 5 கிராம மக்கள் சார்பில் மாவட்ட முன்னாள் கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close