நோய் தாக்கிய சின்னவெங்காய பயிருக்கு இழப்பீடு - விவசாயிகள் கோரிக்கை

  அனிதா   | Last Modified : 03 Dec, 2018 08:21 pm
to-compensate-for-the-disease-affected-small-onion-farmers-demand

நோய் தாக்கிய சின்ன வெங்காயம் பயிரிட்டவர்கள் குறித்து கணக்கெடுத்து, அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடன் மனு அளித்தனர். 

திருச்சி மாவட்டம், நரசிங்கபுரத்தில் விவசாயிகள் சின்னவெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு பயரிடப்பட்டுள்ள பயிர்களில் திடீர் நோய் தாக்குதல் ஏற்பட்டதால் பயிர்கள் ஓரிரு நாட்களிலேயே அழிந்ததாகவும், வேளாண்மைதுறை மற்றும் தோட்டக்கலைத் துறையினர் கொடுத்த மருந்துகளை தெளித்தும் எவ்வித பயனும் இல்லை எனவும் அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். 

இந்நிலையில், கந்து வட்டிக்கு கடன் வாங்கி பயிர்கள் சாகுபடி செய்திருந்த நிலையில் தற்போது சின்ன வெங்காயம் அனைத்தும் நோய் தாக்கி அழிந்து விட்டதாகவும் எனவே பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என நோயால் பாதிக்கப்பட்ட சின்னவெங்காய பயிர்களுடன் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் அளித்தனர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close