சென்னையில் அரசு குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி....!

  அனிதா   | Last Modified : 04 Dec, 2018 04:15 pm
many-lakh-frauds-claiming-to-buy-a-house-in-government-apartment-in-chennai

சென்னை எழில் நகர் பகுதியில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி, 40 பேரிடம் லட்சக் கணக்கில் பண மோசடி செய்த பெண் மீது பாதிக்கப்பட்டோர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் பகுதியைச் சேர்ந்த 40 பேரிடம் எழில் நகர் பகுதி அரசு குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி தலா, 1 லட்சத்து 30 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார். மேலும் வீடு கொடுப்பதற்கு ஆதாரமாக குடிசை மாற்று வாரியம் சார்பில் அளிக்கப்படும் பட்டா போன்று போலியான பட்டாவை தயார் செய்து 40 பேரிடமும் அளித்துள்ளார்.

பட்டாவை நம்பி பணம் அளித்த அனைவரும், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் வீடு கைக்கு வராததால், ஜெயந்தியிடம் இது பற்றி விளக்கம் கேட்டுள்ளனர். அப்போது, விரைவில் வீட்டை பெற்றுத் தருவதாகக் கூறி சமாதானம் பேசி அனுப்பிய ஜெயந்தி அதன்பின் தலைமறைவாகிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அனைவரும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தங்களிடம் நடத்தப்பட்ட பண மோசடி குறித்து புகார் அளித்தனர். மேலும் தங்கள் பணத்தை விரைவில் மீட்டு தரும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close