ஜெயலலிதாவிற்கு 100% சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது: அப்பல்லோ குழும தலைவர்

  அனிதா   | Last Modified : 04 Dec, 2018 04:09 pm
100-best-treatment-for-jayalalitha-apollo-group-chairman

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு 100 சதவீதம் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாக அப்பல்லோ குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில், அப்பல்லோ மருத்துவமனை சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், 50 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு, மேலும் ஒரு மைல் கல்லை எட்டியுள்ள அப்பல்லோ மருத்துவமனையின் சாதனைகளை விளக்கும் விதமாக, வெற்றிகரமான முக்கிய இதய அறுவை சிகிச்சைகள் குறித்து விளக்க உரையாற்றினர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பல்லோ குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டி, இதய நோய் மிகவும் ஆபத்தான ஒன்றாக மாறியுள்ளது. இதய நோயால் உலகம் முழுவதும் 1 கோடியே 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாகவும், இந்தியாவில் இதன் காரணமாக ஏற்படும் உயிரிழப்பு அதிகம் எனவும் கூறினார். மேலும், இதய நோய் குறித்து போதிய விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே இதனை எதிர்கொள்வது சாத்தியம் என்றார்.

அப்பல்லோ மருத்துவமனை 50 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து, சாதனை படைத்து, இதய பராமரிப்பில் முன்னணியில் உள்ளதாகவும், 100க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மக்கள் அப்பல்லோ மருத்துவமனையின் திறமையை நம்பி சிகிச்சை பெற வருவதாகவும் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு 100 சதவீதம் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், தற்போது இது தொடர்பான வழக்கு ஆணையத்தில் இருப்பதால் விரிவாக எதையும் கூற இயலாது எனவும் அவர் கூறினார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close