சென்னையில் கடற்படை தினம் கொண்டாட்டம்

  டேவிட்   | Last Modified : 05 Dec, 2018 12:53 am
navy-day-celebration-at-chennai

இந்திய தேசிய கடற்படை தினத்தை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலையிலுள்ள போர் நினைவுச் சின்னத்தில் கடற்படை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

1971ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றபோது, ஆபரேஷன் திரிசூலம் மற்றும் மலைப்பாம்பு மூலம் பாகிஸ்தானின் கடற்படை கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ஆம் தேதி கடற்படை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதனையொட்டி, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவிடத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கடற்படை ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.  மேலும் இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ராணுவத்தினர் பலர் கலந்துக்கொண்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close