நெல்லையில் மடைகள் உடையும் நிலை; ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

  டேவிட்   | Last Modified : 05 Dec, 2018 01:33 am

farmer-request-to-nellai-collector

நெல்லை கோடகன் கால்வாய் மடைகளை சரி செய்யக்கோரி நெல்லை மாவட்ட பாஜக கிழக்கு மாவட்ட தலைவரும் மானூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான அங்குராஜ் தலைமையில் விவசாயிகள் ஆட்சித் தலைவரிடம் மனு அளித்துள்ளனர். 

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியிலுள்ள கோடகன் கால்வாய் மடை எண் 58, 61, 63, 64, 65, புதிதாக கட்டிய மடைகளுக்கு ஷட்டர் ஏதும் போடப்பட்டாமலும், 63வது மடையில் அரிப்புகள் ஏற்பட்டு உடையும் நிலையில் உள்ளது . மேலும் இந்த மடைகளில் ஏற்பட்ட அரிப்புகளால் தண்ணீர் வீணாகி மடை அருகில் உள்ள விவசரய நிலம் பயிர் செய்ய முடியாதயில் நிலை உள்ளது .

மேலும் மடை பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் 250 ஏக்கர் நிலங்கள் பயிர் செய்யவுள்ள நிலையில் தண்ணீர் வீணாவதால் பிற்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கவனத்தில் கொண்டு கோடகநல்லூர் கால்வாய்களில் மடைகளை சரி செய்தும் , உடனடியாக புதிய ஷட்டர்கள் ஏற்படுத்தி கொடுத்து விவசாய நிலங்களையும் விவசாயிகளையும் காக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா  கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவரும்  மானூர் பஞ்சாயத்து யூனியன் முன்னாள்  மாவட்ட கவுன்சிலருமான அங்குராஜ்  தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்துள்ளனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close