மணிமுத்தாறு நீர் கிடைக்கவில்லை - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  டேவிட்   | Last Modified : 05 Dec, 2018 01:32 am
farmers-complaint-to-tirunelveli-collector

மணிமுத்தாறு மூணு நாலு ரீச் பகுதி விவசாயிகளுக்கு சுழற்சி முறையில் கிடைக்கவேண்டிய தண்ணீர் கிடைக்காததால் 2000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிப்புள்ளதாக சாத்தான்குளம் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். 

மணிமுத்தாறு அணையிலிருந்து 1, 2 ,3 ,4 ஆகிய ரீச்  பகுதிகளுக்கு அணைக்கட்டிலிருந்து சுழற்சி முறையில் நீர்ப்பாசனம் செய்யப்பட்டு வருகின்ற நிலையில் 3, 4 ரீச் பகுதிகளில் தண்ணீர் திறந்து விடப்படாததால் இன்னும் ஒன்றரை மாதங்களில் அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்கள் யாவும் வாடி வருகிறது. இன்னும் பத்து தினங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு நேரில் பார்வையிட்டு அணைக்கட்டிலிருந்து இரண்டாம் மூன்றாம் ரீச் பகுதிக்கு தண்ணீர் திறக்காவிட்டால், சுமார் இரண்டாயிரம் ஹெக்டேர் பயிர் செய்யப்பட்டுள்ள நெற்பயிர் மற்றும் நஞ்சை பயிர்கள் யாவும் கருகி பட்டுப் போய்விடும் என விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனார்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி இரண்டாம் மூன்றாம் பகுதிகளைச் சார்ந்த சாத்தான்குளம் விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதி முருகேசன் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரகாஷ் சதீஷ் அவரிடம் மனுவளித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close