நெல்லை பிரியாணி கடைக்கு எச்சரிக்கை நோட்டீஸ்! உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி

  Newstm Desk   | Last Modified : 05 Dec, 2018 01:52 pm
nellai-samathanapuram-briyani-shop-sealed-by-food-safety-department

நெல்லை சமாதானபுரத்தில்  உள்ள ஜம் ஜம் பிரியாணி கடையில் சுகாதாரம் இல்லாமல் கடையில் பிரியாணி தயார் செய்வதாக உணவு பாதுகாப்பு துறையினரால் கடையில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

நெல்லை சமாதானபுரம் ரவுண்டானா பகுதியில் 'ஜம் ஜம்' என்ற பிரபலமான பிரியாணி கடை உள்ளது. இங்கு சாப்பிட வந்த ஒருவர் பிரியாணி கடை சுகாதாரமில்லாமல் இருப்பதை கண்டு உணவு பாதுகாப்பு துறை 94440 42322 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் பிரியாணி கடையில் சுகாதாரம் அற்ற சூழ்நிலையில் பிரியாணி தயார் செய்வது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர் கடையை முழுவதுமாக சுத்தப்படுத்தி உணவு பாதுகாப்புத் துறையிடம் அனுமதி பெற்ற பின்னரே கடையை திறக்க வேண்டும் என்று அறிவுறுத்தி எச்சரிக்கை நோட்டீஸ் கடையில் ஒட்டப்பட்டது. 

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தகவலறிந்த மக்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close