சென்னை விடுதியில் ரகசிய கேமரா: கட்டிட உரிமையாளர் கைது!

  Newstm Desk   | Last Modified : 05 Dec, 2018 01:51 pm
hidden-camera-at-chennai-hostel

சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் ஒன்றாவது தெருவில்  சஞ்சீவி என்பவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரண்டாம் தளத்தை வாடகைக்கு எடுத்து அதில் பெண்கள் விடுதி நடத்தி வந்துள்ளார். இதில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி பல்வேறு தனியார் மற்றும் தகவல் தொழில்னுட்ப பூங்காக்கலில் பனியாற்றி வந்துள்ளனர்.

இவர்களுக்கு தங்களது விடுதியில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என சந்தேகம் எழுந்த நிலையில் அதனை கண்டுபிடிக்கும் செல்போன் செயலியை கொண்டு ஆய்வு செய்துள்ளனர் . இதில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது தெரிந்துள்ளது.

பின்னர் இது குறித்து விடுதியில் இருந்த பெண் ஆசிரியர் ஒருவர் ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்ததை அடுத்து சம்பவ இடம் வந்த போலீசார் சஞ்சீவியை கைது செய்தனர். மேலும் விடுதியின் குளியலறையில் பெட்டி போன்ற ஒன்றில் மறைத்து வைக்கபட்டிருந்த கண்காணிப்பு கேமராவையும் சில எலக்ட்ரானிக் கருவிகளையும் பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில் கட்டிட கலைஞரான சஞ்சீவி திருச்சியை சேர்ந்தவர் என்பதும் இடத்திற்கு ஏற்ப பல பெயர்களை கொண்டுள்ளார் என்பதும், இவர் மீது பல வழக்குகள் உள்ளதும் தெரிந்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close