'கத்தி' பட கதை விவகாரம்: நடவடிக்கை எடுப்பதாக உதவி காவல்துறை உறுதி!

  Newstm Desk   | Last Modified : 05 Dec, 2018 01:53 pm
kaththi-movie-issue-police-will-take-action-soon

அன்புராஜசேகர் இயக்கிய தாகபூமி குறும்படத்தை திருடி கத்தி திரைப்படமாக எடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் மீது காப்புரிமை சட்டத்தின்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்ககோரி தமிழக முதல்வர் இல்ல அலுவலகத்தில் (Chiefminister camp office) கடந்த நவ.22ந்தேதி புகார் மனு அளிக்கப்பட்டது.

புகார் மனு அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்ககோரி முதல்வர் பிரிவு அலுவலர் அவர்களால் கடிதம் ஒன்று தி.நகர் துணை ஆணையரின் கவனத்திற்கு அனுப்பப்பட்டது. புகார் மனு சரிபார்க்கப்பட்டு வளசரவாக்கம் உதவி ஆணையரின் கவனத்திற்கு அனுப்பப்பட்டது. காப்புரிமை சட்டத்தை சரிபார்த்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உறுதியளித்துள்ளார். மேலும், புகார் மனு தொடர்பாக வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையில் விசாரணை மேற்கொள்ள உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close