நூதன முறையில் பைக் திருடிய 4 பேர் கைது; 12 பைக்குகள் பறிமுதல்

  Newstm Desk   | Last Modified : 05 Dec, 2018 03:13 pm
two-wheelers-seized-in-chennai-vepery

சென்னை வேப்பேரி காவல் துறையினரால் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து பணியின் போது இரு சக்கர வாகனங்களை திருடும் நான்கு பேர் கைதாகியுள்ளனர். கைது செய்யப்பட்ட ஏழுமலை,சீனு,சந்தோஷ்,அஜித் ஆகியோரிடமிருந்து 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணையில், மொத்தம் 20 இருசக்கர வாகனங்களை திருடியதாகவும் அதில், 12 மட்டும் தற்போது போலீசார் கைப்பற்றியுள்ளதாகவும் மீதமுள்ள 8 வாகனங்களை உதிரி பாகங்களாக பிரித்து விற்று விட்டதாகவும் கூறப்படுகிறது .மேலும் திருடிய இருசக்கர வாகனங்களை ஓ.எல்.எக்ஸ் என்ற இணையதளம் மூலம் விற்பனை செய்துள்ளார்கள் என்பது காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இது குறித்து வேப்பேரி குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close